உலகளாவிய ஸ்ட்ரைக் - இளையதளபதி விஜய் தற்கொலைப் படை

Wednesday, June 24, 2009
பின் வரும் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றும் வரை, நிறுத்தாமல் உண்ணும் விரதம் மேற்கொள்ளப் போவதாக இளையதளபதி விஜய் தற்கொலைப் படை உறுப்பினர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

நீங்களும் இந்த மகா ஜோதியில் ஐக்கியமாக விரும்பினால், எங்களுக்கு பணமாகவோ, உணவாகவோ உங்கள் காணிக்கைகளை செலுத்தலாம்.

கோரிக்கை 1 :

அழகிய தமிழ் மகனில் ஓட்டப்பந்தய சாம்பியனாகவும், கில்லியில் கபடி சாம்பியனாகவும், பத்ரியில் பாக்ஸிங் சாம்பியனாகவும், போக்கிரியில் ப்ரில்லியன்ட் ஷூட்டராகவும்,எல்லாவற்றுக்கும் மேலாக குருவியில் கிலோமீட்டர் கணக்கில் பறந்து, லாங் ஜம்ப்பில் உலக சாதனையையும் முறியடித்திருக்கும் நம் இளைய தளபதியின் பெயர் கின்னஸ் புத்தகத்தின் முதல் பக்கத்தில் உடனடியாக சேர்க்கப்பட வேண்டும்.

கோரிக்கை 2 :

அவருடைய இந்த அழகான புகைப்படம் கின்னஸ் புத்தகத்தின் அட்டைப் படத்தை அலங்கரிக்க வேண்டும்.கோரிக்கை 3 :


மேலும், அவருக்கு இந்த வருட ஒலிம்பிக்கில், கீழ்வரும் புகைப்படத்திலுள்ள போட்டிகள் அனைத்திலும், அனைத்துப் பிரிவிலும் கலந்து கொள்ள அனுமதி தர வேண்டும். (அந்தப் போட்டி ஒலிம்பிக்கில் இனைக்கப்படாவிட்டால், இப்போழுதே இனைக்கப்பட வேண்டும்.)
என்னாது.. இந்த வருஷம் ஒலிம்பிக் கிடையாதா?

இம்புட்டு நேரம் பூட்டின வீட்டு முன்னாலயா சலம்பிகிட்டு கெடந்தோம். நல்ல வேளை யாரும் பாக்கல.

___________

ஓக்கே.. ஓக்கே.. கடைசியாக ட்வீட்டி ஸ்டைலில் ஒரு கவிதை..

அழகைப் பற்றி
கவிதை எழுத
சொன்னார்கள்

நான்
உன்னைப் பற்றி
எழுதினேன்

அடி பின்னிட்டானுவ..

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

ஹைக்கூ அல்ல பன்ச்கூ

Saturday, June 20, 2009
அவள் என்னைக்
கடக்கும் போதெல்லாம்
என் இதயத்தைத்
தொட்டுப் பார்த்துக்
கொள்கிறேன்

ஸ்ஸப்பாடா.. என் pocket money தப்பிச்சதுடா!

****

அவள் கண்களைப் பார்த்து
நான் சொல்ல வந்த காதலை
அவள் புன்னகையைப் பார்த்து
புரிந்து கொண்டேன்.

அவள் அல்ரெடி booked என்று.

****

அவள் என்னைத்
திருப்பிப் பார்த்தாள்
நானும் அவளைப் பார்த்தேன்

மறுபடியும் அவள்
என்னைப் பார்த்தாள்
நானும் அவளைப் பார்த்தேன்

ஏன்னா

ரெண்டு பேருக்குமே பரிட்சைல answer தெரியல.

*******

நிஜக் கவித

பய: நான் அழகா இருக்கேனா?
புள்ள: ம்ஹூம்

பய: என் கூட வாழ விரும்புறியா?
புள்ள: ம்ஹூம்

பய: நான் உன்னை விட்டுட்டு போயிட்டா அழுவியா?
புள்ள: ம்ஹூம்

அவன் ரொம்ப சோகமாகி, மூஞ்சைத் தொங்கப் போட்டுகிட்டு திரும்புனதும், அவன் கையைப் புடிச்சு..

புள்ள: நீ அழகா இல்ல. சும்மா சூப்பரா இருக்க. உன் கூட வாழ விரும்பல. உனக்காகவே வாழ விரும்புறேன். நீ என்னை விட்டுட்டு போனா அழ மாட்டேன்.. செத்துடுவேன்.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.