ஹைக்கூ அல்ல பன்ச்கூ

Saturday, June 20, 2009
அவள் என்னைக்
கடக்கும் போதெல்லாம்
என் இதயத்தைத்
தொட்டுப் பார்த்துக்
கொள்கிறேன்

ஸ்ஸப்பாடா.. என் pocket money தப்பிச்சதுடா!

****

அவள் கண்களைப் பார்த்து
நான் சொல்ல வந்த காதலை
அவள் புன்னகையைப் பார்த்து
புரிந்து கொண்டேன்.

அவள் அல்ரெடி booked என்று.

****

அவள் என்னைத்
திருப்பிப் பார்த்தாள்
நானும் அவளைப் பார்த்தேன்

மறுபடியும் அவள்
என்னைப் பார்த்தாள்
நானும் அவளைப் பார்த்தேன்

ஏன்னா

ரெண்டு பேருக்குமே பரிட்சைல answer தெரியல.

*******

நிஜக் கவித

பய: நான் அழகா இருக்கேனா?
புள்ள: ம்ஹூம்

பய: என் கூட வாழ விரும்புறியா?
புள்ள: ம்ஹூம்

பய: நான் உன்னை விட்டுட்டு போயிட்டா அழுவியா?
புள்ள: ம்ஹூம்

அவன் ரொம்ப சோகமாகி, மூஞ்சைத் தொங்கப் போட்டுகிட்டு திரும்புனதும், அவன் கையைப் புடிச்சு..

புள்ள: நீ அழகா இல்ல. சும்மா சூப்பரா இருக்க. உன் கூட வாழ விரும்பல. உனக்காகவே வாழ விரும்புறேன். நீ என்னை விட்டுட்டு போனா அழ மாட்டேன்.. செத்துடுவேன்.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

18 comments:

யாழினி said...

ஹையோ உங்க பன்ச்கூ ரெம்ப சூப்பர்ங்க!


//அவள் என்னைத்
திருப்பிப் பார்த்தாள்
நானும் அவளைப் பார்த்தேன்

மறுபடியும் அவள்
என்னைப் பார்த்தாள்
நானும் அவளைப் பார்த்தேன்

ஏன்னா

ரெண்டு பேருக்குமே பரிட்சைல answer தெரியல‌//

அதிலும் இந்த‌ பன்ச்கூ ரெம்ப‌ ரெம்ப‌ சூப்ப‌ர்.

செம‌ காமெடியா இருந்திச்சு!

முத‌ல் ப‌திவா? வாழ்த்துக்க‌ள் தொட‌ர்வ‌த‌ற்கு...

$anjaiGandh! said...

//அவள் என்னைக்
கடக்கும் போதெல்லாம்
என் இதயத்தைத்
தொட்டுப் பார்த்துக்
கொள்கிறேன்

ஸ்ஸப்பாடா.. என் pocket money தப்பிச்சதுடா!//

சூப்பர் தலைவா.. :))

$anjaiGandh! said...

நீங்களும் தமிழ்மணம் நிர்வாகியா தலைவா? :)

ஒரே ஒரு பதிவைப் போட்டு தமிழ்மணத்துல எடம் புடிச்சிட்டிங்க. :)

யூர்கன் க்ருகியர்..... said...

:)

Tweety said...

//யாழினி said...
அதிலும் இந்த‌ பன்ச்கூ ரெம்ப‌ ரெம்ப‌ சூப்ப‌ர்.
செம‌ காமெடியா இருந்திச்சு!
முத‌ல் ப‌திவா? வாழ்த்துக்க‌ள் தொட‌ர்வ‌த‌ற்கு...//

மிகவும் நன்றி யாழினி! என் பதிவில் முதலில் பின்னூட்டுபவருக்கு பென்ஸ் கார் தரலாம் என்று முடிவு செய்திருந்தேன். பெங்களூர் பக்கம் வந்தால், வாங்கிக் கொள்ளவும். அல்லது விலாசம் அனுப்புங்கள். professional couriers மூலம் மகிழுந்தை அனுப்பி வைக்கிறேன்.

Tweety said...

//$anjaiGandh! said...
// ஸ்ஸப்பாடா.. என் pocket money தப்பிச்சதுடா!//
சூப்பர் தலைவா.. :))//

அடி பலம் போல தல! :-)

//$anjaiGandh! said...
நீங்களும் தமிழ்மணம் நிர்வாகியா தலைவா? :)
ஒரே ஒரு பதிவைப் போட்டு தமிழ்மணத்துல எடம் புடிச்சிட்டிங்க. :)//

தமிழ்மணத்துல எடம் புடிக்கிறது பெருசா என்ன? உங்க இதயத்திலேயே இடம் புடிச்சுட்டேன். (follower அகியிருக்கீங்களே!)

Tweety said...

//யூர்கன் க்ருகியர்..... said...

:)//

நன்றி யூர்கன் க்ருகியர் :)

மயாதி said...

good

Nathimoolam said...

ஹலோ,

கவிதை லோ (Low - மட்டம்)லோ ன்னு இல்லாம, சும்மா நச்சுன்னு இருக்கு,,,அதுக்கு என்னோட இச்...

நதிமூலம்...

Tweety said...

/* மயாதி said...
good */

நன்றி மயாதி..

/* Nathimoolam said...
ஹலோ,
கவிதை லோ (Low - மட்டம்)லோ ன்னு இல்லாம, சும்மா நச்சுன்னு இருக்கு,,,அதுக்கு என்னோட இச்...
நதிமூலம்... */

நன்றி நதிமூலம்..

சென்ஷி said...

செம்ம கலக்கல் :)

Tweety said...

சலாம் சென்ஷி பாய்..

SUREஷ் (பழனியிலிருந்து) said...

அசத்துங்க பாஸ்...,

☀நான் ஆதவன்☀ said...

:)

கே.ரவிஷங்கர் said...

ஒரு “போடாங்கூ”

அவள் எழுதிய கவிதை:

அவன் என்னைக்
கடக்கும் போதெல்லாம்
தன் இதயத்தைத்
தொட்டுப் பார்த்துக்
கொள்கிறான்
ஸ்ஸப்பாடா.
என் pocket money
தப்பிச்சதுடா!
என்று நினைத்துக்கொள்கிறான்
நான் விடுவேனா?
கிரெடிட் கார்டு தேய்டான்னுவேன்

துபாய் ராஜா said...

பன்ச்கூ எல்லாம் சூப்பரப்பு....

C.A.THEVAHER said...

வேணாம் அழுதிடுவன்......

Sen22 said...

WoWWWWWWWWWWWWWWW...


Super APpuuuuu...
:))))))((((((((

Post a Comment