உலகளாவிய ஸ்ட்ரைக் - இளையதளபதி விஜய் தற்கொலைப் படை

Wednesday, June 24, 2009
பின் வரும் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றும் வரை, நிறுத்தாமல் உண்ணும் விரதம் மேற்கொள்ளப் போவதாக இளையதளபதி விஜய் தற்கொலைப் படை உறுப்பினர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

நீங்களும் இந்த மகா ஜோதியில் ஐக்கியமாக விரும்பினால், எங்களுக்கு பணமாகவோ, உணவாகவோ உங்கள் காணிக்கைகளை செலுத்தலாம்.

கோரிக்கை 1 :

அழகிய தமிழ் மகனில் ஓட்டப்பந்தய சாம்பியனாகவும், கில்லியில் கபடி சாம்பியனாகவும், பத்ரியில் பாக்ஸிங் சாம்பியனாகவும், போக்கிரியில் ப்ரில்லியன்ட் ஷூட்டராகவும்,எல்லாவற்றுக்கும் மேலாக குருவியில் கிலோமீட்டர் கணக்கில் பறந்து, லாங் ஜம்ப்பில் உலக சாதனையையும் முறியடித்திருக்கும் நம் இளைய தளபதியின் பெயர் கின்னஸ் புத்தகத்தின் முதல் பக்கத்தில் உடனடியாக சேர்க்கப்பட வேண்டும்.

கோரிக்கை 2 :

அவருடைய இந்த அழகான புகைப்படம் கின்னஸ் புத்தகத்தின் அட்டைப் படத்தை அலங்கரிக்க வேண்டும்.கோரிக்கை 3 :


மேலும், அவருக்கு இந்த வருட ஒலிம்பிக்கில், கீழ்வரும் புகைப்படத்திலுள்ள போட்டிகள் அனைத்திலும், அனைத்துப் பிரிவிலும் கலந்து கொள்ள அனுமதி தர வேண்டும். (அந்தப் போட்டி ஒலிம்பிக்கில் இனைக்கப்படாவிட்டால், இப்போழுதே இனைக்கப்பட வேண்டும்.)
என்னாது.. இந்த வருஷம் ஒலிம்பிக் கிடையாதா?

இம்புட்டு நேரம் பூட்டின வீட்டு முன்னாலயா சலம்பிகிட்டு கெடந்தோம். நல்ல வேளை யாரும் பாக்கல.

___________

ஓக்கே.. ஓக்கே.. கடைசியாக ட்வீட்டி ஸ்டைலில் ஒரு கவிதை..

அழகைப் பற்றி
கவிதை எழுத
சொன்னார்கள்

நான்
உன்னைப் பற்றி
எழுதினேன்

அடி பின்னிட்டானுவ..

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

39 comments:

Xavier said...

செம மொக்கை . . .

Tweety said...

/*Xavier said...
செம மொக்கை . . . */


அது...

இளைய கவி said...

சிரியா சிரிக்க வேண்டியிருக்கு...

Tweety said...

நன்றி இளைய கவி :-)

☀நான் ஆதவன்☀ said...

முடியல சாமி!!!!! எடுடா ட்ரை சைக்கள, போடுடா சாமான் எல்லாத்தையும்...

Tweety said...

நன்றி ☀நான் ஆதவன்☀

- நான் Tweety

ரமேஷ் வைத்யா said...

பிரமாதம். பின்னிட்டீங்க.

கலையரசன் said...

எத்தனை தடவைதான் ?
முடியல.. விட்டுடுங்க!!

கலையரசன் said...

settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)

Tweety said...

// ரமேஷ் வைத்யா said...
பிரமாதம். பின்னிட்டீங்க.//

நன்றி ரமேஷ் வைத்யா...

Tweety said...

// கலையரசன் said...
எத்தனை தடவைதான் ?
முடியல.. விட்டுடுங்க!!//

ஹி.. ஹி.. இந்த ஒரு வாட்டி தானுங்கோ..

// settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-) //

ஸாரி கலை.. இந்தப் பதிவைப் படிக்கிறதே பெரிய பெரிய டார்ச்சர்.. இதுல word verification வேற வச்சு டார்ச்சர் குடித்துட்டேனே..

சென்ஷி said...

:))

Tweety said...

:)))))) சென்ஷி :))))))

ரெட்மகி said...

ahha good one

tamil kathal said...

vijay,thoni paddankappa pasanka

super

யூர்கன் க்ருகியர்..... said...

:-)

Tweety said...

Thanks ரெட்மகி :-)

கார்க்கி said...

ஹிஹிஹி.. இப்படியே போட்டுக்கிட்டே இருங்க...

Tweety said...

Thanks Tamil kathal.. except super onniyum puriyala :-(

But No probs.. :)

Tweety said...

Thanks யூர்கன் க்ருகியர் :-))))))))))))))

Tweety said...

நன்றி கார்க்கி..

ஹ்ம்ம்ம்ம்ம்.. ஒரு நாளில்லைனா ஒரு நாள் அவர் ஹாலிவுட் படத்துல, (மே பி.. அடுத்த ஜேம்ஸ் பாண்ட் சீரிஸ்ல) நடிக்க தான் போறாரு.

உண்ணும் விரதத்தில நீங்களும் கலந்துக்குறீங்க தானே!

Janani said...

hahaahhahaha

superb pa

ennaa kola veri vijay mela...

ayyo ayyo..

Romba nalla iruku..

C.A.THEVAHER said...

இவன் எல்லாம் ஒரு நடிகன்.......
பேசாம போங்க.......
நான் அண்மையில் பார்த்த சில நல்ல ஆங்கில படங்கள்.....
traitor
walk to remember
man on fire
the life before her eyes
இதுகளை பாருங்க...

Tweety said...

நன்றி ஜனனி.. :-)

கொலை வெறி அவர் மேல் அல்ல. அவர் தேர்வு செய்யும் வகை படங்கள் மேல். பரிசோதனைக்காகக் கூட ஒரு நல்ல படம் நடிக்காமல், தவறான ரோல் மாடலாக இருக்கிறாரே என்ற கடுப்பு தான்.

Tweety said...

மிகவும் நன்றி திவாகர்.. traitor பார்த்திருக்கிறேன். அருமையான படம். வேட்டைக்காரன் man on fire திரைப்படத்தின் தமிழாக்கம் என்று கேள்வி.. ப்ச்.. ப்ச்.. கேள்வி...

மற்றபடி, அவன் இவன் என்ற ஏகவசனத்தைத் தவிர்க்கலாமே!

Tweety said...

தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களித்த புண்ணியவான்/வதிக்கு நன்றி.. எப்படி வாக்களிப்பது என்று தெரியாமல் இரண்டு நாட்களாக திருதிருவென முழித்துக் கொண்டிருக்கிறேன்.

பொட்டி அனுப்புகிறேன்.. தினமும் வந்து ஒரு ஆதரவு குத்து குத்திவிட்டு போகவும்.

கார்க்கி said...

//உண்ணும் விரதத்தில நீங்களும் கலந்துக்குறீங்க தானே/

ஓ அடியேனைப் பற்றி தெரியுமா? அப்படியென்றால் ஒரு கேள்வி

//பரிசோதனைக்காகக் கூட ஒரு நல்ல படம் நடிக்காமல், தவறான ரோல் மாடலாக இருக்கிறாரே என்ற கடுப்பு தான்//

அவருக்கு வரல செய்யல. ஆனா வரக்கூடிய விக்ரம், சூர்யாவும் ஏன் ஆறு, வேல், அயன், ஆதவன், பீமா, கந்தசாமி என மசாலா படஙக்ளில் நடிக்கிறார்கள்? அவரு சுமாரா பெர்ஃபார்ம் செய்த வசீகரா, சச்சின் போன்றவை அவர் ரேஞ்சுக்குள் இருந்தன,. ஆனா ஓடவில்லை. அவர் என்ன செய்வார்?

விஜயோடு மற்ற சிகாமணிகளையும் ஓட்டினால் ஓக்கே. இல்லை விஜய் தான் என் டார்கெட் என்றால்.. விடுங்க பாஸ்...உங்க இஷ்டம்.. நடத்துங்க

Tweety said...

// ஓ அடியேனைப் பற்றி தெரியுமா? //

என்னங்க்னா இப்டி கேட்டுட்டீங். அவர் சைலன்ஸ்னு கத்தினது கூட சரி தான்னு வாதாடினவரு தானே நீங்க.. (அன்னிக்கு வாங்கிக் கட்டிகிட்ட ரசிகர் கூட்டத்தில், நீங்க இருந்திருந்தாலும், அவருக்கு சப்போர்ட் பண்ணிருப்பீங்களானு தெரிஞ்சுக்க ஆவல்)

// அவருக்கு வரல செய்யல. //

என்னங்க கார்க்கி வரல? நடிப்பு வரலனு சொல்றீங்களா? ஸ்க்ரிப்ட் வரலனு சொல்றீங்களா?

அவர் என்ன படம் நடித்தாலும் பார்க்க தயாராக இருக்கும் உங்களைப் போன்ற அவர் ரசிகர்களுக்காகவாவது, புது இயக்குனர்களை அனுகி, நல்ல ஸ்க்ரிப்டைத் தேடி நடித்தால் என்ன என்பது தான் என் வாதம்.

மற்றபடி, மசாலா படங்களில் நடிப்பது தெய்வ குற்றமில்லை. எனக்கு திருப்பாச்சி பிடித்திருந்தது. போக்கிரியின் முதல் பாதி பிடித்திருந்தது. குருவி, வில்லு கடுப்பேத்தியது.

// விஜயோடு மற்ற சிகாமணிகளையும் ஓட்டினால் ஓக்கே. //

கூல் டவுனுங்னா.. விஜய்க்கும் எனக்கும் பங்காளித் தகறாரா என்ன? யாரை ஓட்டனும்னு டைம் டேபிள் போட்டுக் குடுங்க.. போட்டுத் தாக்கிடுவோம்.

Ahamed Sanoon said...

இப்பவும் சிரிப்பாவே இருக்கு...

Tweety said...

சிரிப்பு எதுக்குனு சொன்னா நாங்களும் சேந்து சிரிப்போம்ல Ahamed Sanoon..

கடைக்குட்டி said...

2 was not nice..

al othe really superb..

கடைசில.. இந்த வருஷம் ஒலிம்பிக் இல்லன்னது சூப்பரு :-)

லாஸ்ட் கவிதைக்குதான் ஃபஸ்ட்டு ப்ரைஸ்...

Tweety said...

//கடைக்குட்டி said...
2 was not nice.. //

மே பி.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்ஸ்..

//al othe really superb..
கடைசில.. இந்த வருஷம் ஒலிம்பிக் இல்லன்னது சூப்பரு :-)
லாஸ்ட் கவிதைக்குதான் ஃபஸ்ட்டு ப்ரைஸ்...//

நன்றி கடைக்குட்டி.

Thamizhmaangani said...

சிரிப்பை அடக்க முடியவில்லை!:)

Tweety said...

நன்றி தமிழ்மாங்கனி.. :-)

கார்க்கி said...

//என்னங்க்னா இப்டி கேட்டுட்டீங். அவர் சைலன்ஸ்னு கத்தினது கூட சரி தான்னு வாதாடினவரு தானே நீங்க.//

அப்படியா? எனக்கு ஞாபகமில்லை. அந்த வீடியோ போட்டு விவகாரமான தலைப்பு வைத்து ஹிட்ஸ் பார்த்த நண்பர்களைத்தான் திட்டினேன்.

//யாரை ஓட்டனும்னு டைம் டேபிள் போட்டுக் குடுங்க.. போட்டுத் தாக்கிடுவோம்//

விஜயை ஓட்ட யாரு டேட் சொன்னாஙக்ளோ அவர்களையே கேளுங்க :)))

//அவர் என்ன படம் நடித்தாலும் பார்க்க தயாராக இருக்கும் உங்களைப் போன்ற அவர் ரசிகர்களுக்காகவாவது//

அட எங்கள விடுங்க.. நீங்க கூட எல்லாப் படங்களையும் பார்த்து இருக்கிங்க போலிருக்கே.. எல்லோருமே இப்படித்தாங்க. விஜய் படம்ன்னா முதல் நாளே பார்க்க வேண்டியது அப்புறம் தலைவலிக்குது புலம்ப வேண்டியது. வேட்டைக்காரனுக்கும் இது நடக்கும் பாருங்க

Sen22 said...

Super APpu...


Senthil,
Bangalore

Tweety said...

//எல்லோருமே இப்படித்தாங்க. விஜய் படம்ன்னா முதல் நாளே பார்க்க வேண்டியது அப்புறம் தலைவலிக்குது புலம்ப வேண்டியது. //

கரெக்ட் கார்க்கி. ஆனா ஒரு வித்தியாசம். நீங்க (விஜய் ரசிகர்கள்) தியேட்டர்ல டிக்கெட் கிழிச்சு போட்டுகிட்டும், விசிலடிச்சுகிட்டும், டான்ஸ் ஆடிக்கிட்டும் பார்ப்பீங்க. நாங்க திருட்டு டிவிடில, திட்டிகிட்டே, fast forward பண்ணி பார்ப்போம். எல்லாம் இதாவது உருப்படியா இருக்காதா என்ற நப்பாசை தான்.

// வேட்டைக்காரனுக்கும் இது நடக்கும் பாருங்க //

அப்போ வேட்டைக்காரனும் இதே ரகம் தானா? :-(

உங்களிடம் நான் ஆவலுடன் கேட்ட அந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லவே இல்லையே! மீண்டும் நினைவு படுத்துகிறேன். யாரோ ஒரு நிருபர் கேட்கும் எடக்கு மடக்கான கேள்விக்கு, விஜய் உங்களைப் பார்த்துக் கத்தியிருந்தால் அதற்குப் பிறகும் அவரது ரசிகராக இருப்பீர்களா?

Tweety said...

//Sen22 said...

Super APpu...//

நன்றி செந்தில்.

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

Post a Comment